விரைவில் மாற்றப்பட இருக்கும் மன்மோகன் சிங்கின் மந்திரி சபையிலிருந்து, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் நீக்கப் பட இருக்கிறார்.
எனவே, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை சுப்பிரமணிய சுவாமி போன்றோரும், எதிர் கட்சியினரும் எழுப்பியிருந்தனர். அவர் விலகா பட்ச்த்தில் பதவி நீக்கம் செய்யவும் கோரியிருந்தனர்.
இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படாத சூழ்நிலையில், நேற்று அமைச்சர் தயாநிதி மாறன் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசியது, அரசியல் பார்வையாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது.
பிரதமர் தன்னை நீக்கும் முன் தானாக பதவி விலகிக்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பும் வலுத்துள்ளது. ஆனால் இந்த சந்திப்பின் போது, தானும் பிரதம மந்திரியும் ஜவுளித்துறை சம்பந்தமாக கலந்துரையாடிதாக, நேற்று சிஎன்என்-ஐபிஎன் ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
2ஜி ஊழல் சம்பந்தமாக முன்னால் தொலைதொடர்புத்துறை அமைச்சர் எ.ராஜாவும், கனிமொழியும் கைதுசெய்யப் பட்டிருக்கும் இந்த நிலையில், தயாநிதி மாறன் தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் அவர் செய்திருந்த ஊழல்கள் சம்பந்தமான ஆதாரங்கள் சிபிஐ யிடம் மாட்டியிருக்கிறது. எனவே மாறனை காப்பாற்ற திமுக தற்போது சக்தியிழந்து இருப்பதால், நடக்க இருக்கும் மந்திரி சபை மாற்றத்தின் போது உறுதியாக நீக்கப்பட்டு சிபிஐ யின் விசாரணைக்குள் கொண்டுவரவும் ஏற்பாடுகள் நடக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
ஏர்செல் நிறுவனத்தின் முன்னால் அதிபர் சி.சிவசங்கரன், மாறனுக்கு எதிராக கொடுத்திருக்கும் குற்றசாட்டின் படி. 2001-2007 காலவாக்கில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் போது ஏர்செல்லின் பணயத்தை, மலேசிய கம்பெனியான மெக்ஸிஸ் கம்யுனிகேசன் என்ற நிருவனத்திற்க்கு விற்பதற்க்கு, மாறன் கட்டாயபபடுத்தியிருக்கிறார். அதற்கு பதிலாக, மாறனின் குடும்ப சொத்தான சன் டிவிக்கு 600கோடி ரூபாயை அந்த மலேசிய நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது.
ஏர்செல் முன்னால் அதிபர் சிவசங்கரன், ஜுன் 6 2011 அன்று கொடுத்த வாக்குமூலப்படி, 51 விழுக்காட்டுப் ப்ங்கினை வைத்துக்கொண்டு, 49 விழுக்காட்டை விட்டுக் கொடுப்பதாக கூறியதையும் கேளாமல், சிவசங்கரனின் தொழிலுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகளை கொடுத்து, நடத்தவிடாமல் செய்து, ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் கம்பெனிக்கே விற்றுவிட்டு நாட்டைவிட்டே வெளியேறும் படி, மாறன் செய்திருக்கிறார்.
சிவசங்கரன் தற்போது லண்டனில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். அங்கே சென்றுதான் சிபிஐ, மாறன் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரித்து வருகிறது.
ஆனால், தயாநிதி மாறனோ தன்னை குற்றமற்றவர் என கூறிவருகிறார். “நான் யாரையும் தொழில் செய்யும் படியோ, அல்லது தொழிலை விற்கும் படியோ நிர்பந்தித்தது கிடையாது. உங்களிடம் நான் ஒன்றை சொல்ல வேண்டும். தன்னை யாரும் நிர்பந்திப்பதாக உணர்ந்தால், அவர்கள் நீதி மன்றத்திற்குத் தானே போயிருக்க வேண்டும்.” என்கிறார் தயாநிதி மாறன்.
யார் என்ன சொன்னாலும், சிபிஐ, தயாநிதி மாறனுக்கு எதிரான கோ(ஆ)ப்புகளை தயார் செய்வதில் மிக மும்மரமாக செயல் பட்டுக்கொண்டிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சம்.
ராசா, கனிமொழிக்குப் பிறகு சிபிஐ-ன் அடுத்தக் குறி தயாநிதி மாறன் என்பது வெளியரங்கமான உண்மை...!
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், புதிய ஏர்செல் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ள தயாநிதி மாறன், பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளையும் தவறாக பயன்படுத்தியதாகவும் கூறப்பட்ட சர்ச்சை மீண்டும் எழும்பியுள்ளது.