இஸ்லாமாபாத்: ”பெரிய போரைகூட தாங்கிக் கொள்ளக்கூடிய, இந்தியாவின் அதிநவீன ராணுவ தளவாடங்களுக்கு இணையாக, பாக்கிஸ்தானும் அடைவது என்பது இயலாத காரியம்.” என்று, பிபிஸி உருது செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது, பாக்கிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் சௌத்ரி அஹ்மத் முக்தார் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தன் கருத்தை வலியுறுத்தும் வகையில் மேலும், “இந்தியாவின் பொருளாதாரம் பாக்கிஸ்தானைவிட ஆறிலிருந்து ஏழு மடங்கு பெரியது, வியாபார மதிப்பு ஐந்திலிருந்து ஆறு மடங்கு பெரியது” என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியா, பாக்கிஸ்தானின் பெரிய எதிரி என்று காட்டப் படுகிற கருத்துப் பற்றி கேட்கப் பட்ட கேள்வி ஒன்றிற்கு அவர் பதிலளிக்கையில், ’அது நாட்டின் ஆரம்பகால பிரச்சனையினால் உண்டானது,
மேலும், 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, இரு நாட்டு உறவிலும் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே போர்கள் நடந்திருக்கின்றன, எல்லை பிரச்சனைகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன, மும்பை தாக்குதலால் பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும்,
மெல்ல மெல்ல பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியிருக்கின்றன, மக்கள் எல்லையை கடந்து செல்ல முடிகிறது. வாகா (Wagah) விலிருந்து அமிர்தசரஸ் வரை கையில் பெட்டியுடன் செல்ல முடியும் எனபது யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள், ஆனால் அந்த உண்மை நடந்திருக்கிறது, என்று பிபிஸி உருது செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது, பாக்கிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் சௌத்ரி அஹ்மத் முக்தார் கருத்து தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment