புது டெல்லி . ஜுன் 28.
“2011 MD” என பெயரிடப்பட்ட அந்த வின்கல், பூமியை இடிப்பதற்க்கு 7500 கிலோ மீட்டர் தூரத்திலேயே தெற்க்கு அட்லாண்டிக் பகுதிக்கு மேலாக, மதியம் 1மணிக்கு வந்து சென்றது.
சோலார் சிஸ்டத்தில் இது மிகவும் நெருக்கமான தூரமாக கருதப் படுகிறது. காரணம், பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட தூரத்தில் இது மூன்றே மூன்று விழுக்காடாகும், இது சாதாரண டெலஸ்கோப் மூலம் பார்க்ககூடிய தூரமாகும்.அனிமேசனை காணவும்.
ஆனால் இந்த வின்கல் பூமியின் மீது விழுந்திருந்தால், அதன் மூலம் அழிவு ஏதும் உண்டாக வாய்ப்பில்லை என நாசா விஞ்ஞானிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்த மாதிரி சைஸ் கொண்ட வின்கல், எரிகல்லாக பூமிக்குள் நுழையும் போது கண்கவர் நெருப்பு பந்தாக தோன்றி அதன் சாம்பல் அல்லது அதன் சிறிய துகழ்கள் கடலிலோ, நில பரப்பிலோ விழுந்திருக்கும். பூமிக்கு எந்தவித பாதிப்பும் உண்டாகியிருக்காது.
துரதிஷ்டவசமாக, பெரிய வின்கல் விழும் போது தான் பூமிக்கு, குறிப்பிட்டுச் சொல்லும் படியான சில அழிவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, 112 மைல் அளவுள்ள வின்கல் பூமியின் மீது விழுந்த போது டைனோசர் அழிந்தது.
ஆனால் அது போன்ற பெரிய வின்கற்கல் ஏதும் பூமியை நோக்கி வரும் என்றால் அதை சில வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடித்துவிட முடியும்.
விஞ்ஞானிகளின் கணக்குப்படி, பொதுவாக 490 அடிக்கு அதிக அகலமுள்ள வின்கல் பூமியின் மீது விழுந்தால் தான் பாதிப்பு இருக்கும் என்கிறார்கள்.
வரும் 2029 ஆம் ஆண்டு, 900 அடி அளவுள்ள வின்கல் ஒன்று பூமியை 18,000 மைல் தூரத்தில் கடக்க இருக்கிறது. ஆனால் கவலைப் படவேண்டாம் என விஞ்ஞானிகள் ஆறுதல் கூறுகிறார்கள்.
0 comments:
Post a Comment