Thursday, July 14, 2011

நித்யானந்தரின் தங்க சிம்மாசனத்தில், அவரின் கால்களுக்கு அலங்காரமாயிருப்பது வலப்பாகத்தில் விக்னேஸ்வரும், இடப்பாகத்தில் விஷ்ணுவும்-ல்க்ஷ்மி தேவியும்!




உலகமே கண்டு வியப்புற்ற ஸ்வாமி நித்தியானந்த பரமஹம்சரின், அந்தரங்க விசயங்களைப் பற்றி வெளியான வீடியோ காட்சிகள் பொய்யானவை என்றும்,  அவை அணைத்தும் மார்பிங்க் முறையில் உருவாக்கப் பட்டவை, எனவே அதை ஒளி பரப்பிய சன் டிவி நிறுவனம் மற்றும் நக்கீரன் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென புகார் செய்திருக்கிறார் நித்தியானந்தர். மேலும் அவரது ஆசிரமம் மற்றும் தியானபீடம் மீது நடந்த தாக்குதல் மத ரீதியானது என்றும் கூறியிருக்கிறார்.

சன் டிவி மீது பழி சுமத்தவேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் இருக்கும் இவரது ஒரே நம்பிக்கை முதல்வர் ஜெயலலிதா என்பது தெளிவாக தெரிகிறது. திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்க தயாராக இருக்கும் தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் மனப்போக்கை தெளிவாக புரிந்துவைத்திருக்கும், ஸ்வாமி நித்யானந்த பரமஹம்ஸரின் புதிய ‘ஸ்மார்ட் மூவ்’ தான் இது!

  மேலும் சமீபத்தில் சென்னையில் வைத்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘தமிழக முதல்வர் மீதும், பத்திரிகைகள் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. புகார்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். ஆளும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்பேன். அழைப்பு வந்தால் சூழ்நிலைகளைப் பார்த்து முடிவு செய்வேன். முதல்வர் மீது முழு நம்பிக்கை உள்ளது.’ என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நித்தியானந்த பரமஹம்சருக்கு, தன்னை இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் சீடர்கள் மீது நம்பிக்கை இருப்பது போல், கருணாநிதியின் குடும்பத்தினர் மீது, தேவைப்படும் நடவடிக்கை எடுக்கத்தயாராக இருக்கும் தமிழகமுதல்வர் மீதும் நம்பிக்கை இருக்கிறது. மூன்றாவதான மிகப் பெரிய நம்பிக்கை, மக்களை மிக எளிதில் முட்டாளாக்க முடியும் என்கிற நம்பிக்கை!

இந்த மூன்றாவது நம்பிக்கைக்குக் காரணம்,
   இவரின் அந்தரங்க செயல்பாடுகள் வெளிப்பட்டதும், தமிழகத்தில் இந்து மக்கள் முன்னணியும், கர்நாடகாவிலுள்ள இந்துமதகட்சியும் இவருக்கு எதிராக கிளம்பியதும், மிரண்டுபோன நித்தியானந்தர் செய்த முதல் காரியம், அவரைக் காட்டிக்கொடுத்த அவரது சீடரான நித்ய பிரேமானந்தா என்ற பக்கா இந்துவான லெனின் கருப்பனை, கிருஸ்தவர் என்றும், அவர் இந்துமதத்திற்க்கு புகழ் சேர்க்கும் தன்னை வேண்டுமென்றே கேவலப்படுத்துவதற்க்காக இக்காரியத்தை செய்திருப்பதாக பிரசாரம் செய்து, எந்த இந்து மக்கள் முன்னணி அவருக்கு எதிராக செயல்பட்டதோ அதை புத்திசாலித்தனமாக தன் வசப்படுத்தினார்.

 தற்போது,  தன்னை ஒரு இந்துமத ஆன்மீகவாதியாக காட்டிக்கொள்ளும் நித்தியானந்தர், இவருக்கு எதிர்ப்பு கிளம்பாதிருந்த காலத்தில் பேசிய பிரசங்களில், கல்விக்குரிய தெய்வமான சரஸ்வதியைப் பற்றிக்குறிப்பிடுகையில், அது வெறும் கற்பனை, அப்படிப்பட்ட படத்திற்க்கு மணி அடித்து பூஜை செய்வதைப்பற்றி கிண்டல் அடித்திருக்கிறார்.
 இப்போது அது பற்றி பேச்செடுத்தால், ‘அது நான் கூறியதல்ல, இந்து ஆன்மீகவாதியான என் புகழை கெடுப்பதற்க்காக யாரோ பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் செய்திருக்கும் மிமிக்ரி வேலை’யென சொன்னாலும் ஆச்சரியப்படமுடியாது. ஆனால் இந்த ஒலிநாடா நித்யானந்தரின் தியானப்பயிற்சி மற்றும் சத்சங்கம் நடக்கும் இடங்களில் அவர்களால் விற்பனை செய்யப் படுகிறது. (திருநெல்வேலி ஜங்சனில் உள்ள மதிதா இந்து மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடந்த, நித்யானந்தர் தியான பயிற்சி வகுப்பில் விற்கப்பட்ட ஒலி நாடாக்களில் இதுவும் ஒன்று.)
  காலங்காலமாக வழிபட்டு வரும் இந்துக்களின் தெய்வங்களை ஸ்வாமி நித்யானந்த பரமஹம்ஸர், கேவலப்படுத்துவது முறையா? இப்படியெல்லாம் பேசினால், வெள்ளைககாரர்கள் சந்தோசப்பட்டு காணிக்கைகளை அள்ளி வீசுவார்கள் என்பதற்க்காகவா?
 இவர் இந்த மாதிரி பேசினாலும், புரியாமல் கேட்டு வரும் இந்துக்களையும், அவர் கூடவே காவி உடையும் ருத்ராட்ச மாலையும் போட்டுக்கொண்டு திரியும் மனிதர்களையும், ஸ்வாமி நித்யானந்த பரமஹம்சர் மிக அதிகமாகவே புரிந்து வைத்திருக்கிறார்.




 உடுக்கையுடைய திரிசூலத்தை கையில் பிடித்திருக்க சிவனன்றி பிறர்யாருக்கேனும் அருகதை உண்டா? ஆனால் திரிசூலத்தை, நித்யானந்தர் கையில் பிடித்தபடி காட்சிக்கொடுக்க, மற்ற பெரியோர்கள் வாய்மூடி நிற்க காரணம் எதுவோ?

நித்யானந்தரின் தங்க சிம்மாசனத்தில், அவரின் கால்களுக்கு அலங்காரமாயிருப்பது யார் தெரியுமா? வலப்பாகத்தில் விக்னேஸ்வரும், இடப்பாகத்தில் விஷ்ணுவும்-ல்க்ஷ்மி தேவியும்!





 ஒரு நடிகையுடன் வைத்திருந்த தகாத உறவின் அவமானத்திலிருந்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்க்காக, இவர் கேடயமாக பயன்படுத்துவது இந்துமதத்தை!. ஆனால் இவருக்கு பணத்தை அள்ளித்தரும் தியானமுறைகளில் பிண்ணிப்பினைந்திருப்பது சூஃபி(இஸ்லாம்), புத்தமத மற்றும் கிறிஸ்தவ முறைகளும் தான். ஒரு சுத்தமான ஹிந்து ஆன்மீகவாதி பிறமத முறைகளை தொட்டுப்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.

எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்த்தால் ஒரு விசயம் மிக தெளிவாகிறது. அது என்னவென்றால், பொன் பொருள் பெண் மீது ஆசை அறவே இல்லாத, ராம கிருஷ்ண பரமஹம்ஸரின் புனிதமான பெயரை, இளம் வயதிலேயே தன்னுடன் இணைத்துக் கொண்ட  ஸ்வாமி நித்யானந்த பரம்ஹம்சர், “யாரையும் மிக எளிதாக ஏமாற்றிவிட முடியும். குறிப்பாக, தன்னைவிட மிகப்பெரிய அறிஞர்களையும், மஹான்களையும் முட்டாளாக்க வேண்டுமென்றால், மிஞ்சியுள்ள சாதாரண மக்கள் அணைவரையும் முட்டாளாக்கி விட வேண்டும், என்றால் அறிஞர்களின் வாக்கு பங்சராகிவிடும்.” என்ற விசயத்தை மிக நன்றாகவே தெரிந்துவைத்துக் கொண்டு சரியான நேரத்தில், மிக சரியாக பிரயோகம் செய்துவருகிறார்.

ஹிந்து மதத்தின் அடிப்படையான, மறுக்கவோ மாற்றப்படக்கூடாததுமான தத்துவம், மனிதர்களின் செயலுக்கேற்ற பலன் கிடைத்தே தீரும். அது பாவம், புண்ணியம் என்று இருவகை வகைப்படும்.   அதற்கொப்பவே அடுத்தப் பிறவியும்அமையும். இந்த பாவ-புண்ணிய, மறுபிறவிக் கோட்பாட்டை மறுப்பவனை ஹிந்துவாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஏற்றுக்கொள்ளாதவன், மறுபிறப்பை மறுக்கும் பிற மதத்தின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவனாக கருதப்பட வேண்டும்.
     சொல்ல வந்த விசயம் இது தான். ஸ்வாமி நித்யானந்த பரமஹம்சர், பாவ புண்ணியத்தையோ, மறுபிறப்பையோ ஏற்றுக்கொள்வதில்லை.!

யார் யாரை ஏமாற்றுகிறார்கள்...?
யாரெல்லாம் எப்போது ஏமாந்து போகிறார்கள்...?
யாரெல்லாம் எப்படி ஏமாற்றப் படுகிறார்க்ள்...?

0 comments:

Post a Comment

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons