நியுடெல்லி, ஜூன் 26-2ஜி ஊழல் வழக்கு விசாரணையை மிகவும் தாமதமாக நடத்துவதாக அவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஓ.பி.சைனியிடம், இவ்வழக்கில் ஆ.ராசாவின் சார்பாக வாதாடிவரும் வழக்கறிஞர் சுஷில் குமார் கோபித்துக்கொண்டார்.
2ஜி வழக்கு சிபிஐ-யின் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று இரண்டாவது நாள் நடைபெற்ற வழக்கின் போது, முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவின் சார்பாக வாதாடிவரும் வழக்கறிஞர் சுசீல்குமார், நீதிபதி ஓ.பி.சைனி மீது கோபமடைந்ததால் நீதிமன்றத்தில் பரபரப்பு காணப்பட்டது.
அவர் இன்று நீதிபதியை பார்த்து," நீங்கள் இந்த வழக்குக்காக மட்டுமே ஊதியம் பெறுகிறீர்கள். நான் வேறு பல வழக்குகளுக்காகவும் செல்ல வேண்டி உள்ளது.
நான் தினமும் உங்கள் முன் வந்து உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டுமா? இது மிகவும் நியாயமற்ற விசாரணையாக உள்ளது.”
மேலும், “ஆவணங்களை ஆய்வுசெய்ய மட்டும் 6 மாதம் எடுத்துக்கொண்டுள்ளீர்கள்" என்று கூறினார்.
இதைக்கேட்ட நீதிபதி சைனி அதிர்ச்சியடைந்தார்.

0 comments:
Post a Comment