Friday, July 22, 2011

போர்க்குற்ற விசாரணை நடத்தாவிடில், இலங்கைக்கான உதவிகள் ரத்து : அமெரிக்க காங்கிரஸ் அறிவிப்பு.




நியூயார்க்.ஜூலை 22-
இலங்கை அரசாங்கம் 2009 ஆம் ஆண்டு போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை தொடராவிட்டால், அந்த நாட்டுக்கான உதவிகளை நிறுத்தப் போவதாக அமெரிக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானத்தை நேற்று,அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் குழு நிறைவேற்றியுள்ளது.

இந்த தீர்மானத்தின்படி, மனிதாபிமான உதவிகளை தவிர்த்து மற்ற அனைத்து நிதியுதவிகளும் நிறுத்தப்படுவதற்கு அமெரிக்க காங்கிரஸின் வெளிநாட்டு விவகார குழு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடாபான தீர்மானத்தை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹவாட் பேர்மன் முன்மொழிந்தார்.

இலங்கையின் போர்க்குற்றச்சாட்டு உட்பட்ட ஊடக சுதந்திரம், அவசரகால சட்ட நீக்கம், என்பனவும்; நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று காங்கிரஸின் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டின் நிதியாண்டுக்காக இலங்கைக்கு வழங்குவதற்க்கு 13 மில்லியன் டாலர்களை அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் அந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இந்தநிலையில் காங்கிரஸின் நேற்றைய தீர்மானம், உடனடியான அமுலுக்கு வராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons