புதுடெல்லி ஜூலை20-
இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற வந்திருக்கும் ஹிலாரி கிளிண்ட்ன் செவ்வாய் கிழமை காலை, இந்திய வெளியுறவு அமைச்சருடன் இரு நாடுகளுக்கிடையிலான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
மும்பையில் சமீபத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியில், தங்களது இன்றைய பேச்சில் தீவிரவாதம் தொடர்பான விடயம் முக்கிய இடம் பிடித்ததாக ஹிலாரி தெரிவித்துள்ளார்.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் பாகிஸ்தான் முழுமையான ஒத்துழைப்புத் தரவில்லையெனக் கூறப்படும் நிலையில், அமெரிக்கா அதுதொடர்பாக நிர்பந்தம் செய்கிறதா என்ற கேள்விக்கு ஹிலாரி பதிலளித்தார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளை வரவேற்ற ஹிலாரி, ‘பாகிஸ்தான் முதலில் தனது பாதுகாப்புக்காகவும், தனது மக்களின் பாதுகாப்புக்காகவும் தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானுடனான நீண்ட கால உறவு என்றிருந்தாலும், எந்தப் பகுதியிலும் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு அரண் வழங்குவதை பொருத்துக் கொள்ள முடியாது என்ற பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் இருக்க வேண்டும், யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதற்காக, எந்த நாடும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடு்ப்பதை அனுமதிக்க முடியாது’ என்று உறுதி படக்கூறியிருக்கிறார்.
0 comments:
Post a Comment