இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை, ஈவு இரக்கம் இன்றி படுகொலை செய்த, சிங்கள ராணுவத்திற்க்கு மேலும் பயிற்சி கொடுப்பதற்காக, இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த பயிற்சி ஊட்டி வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கழகத்தில் நடப்பதாக இருந்தது. இந்த ராணுவப்பயிற்சி திட்டத்திற்கு சீமான், வைகோ போன்றோர் காட்டிய எதிர்ப்பு காரணமாக பயிற்சி நிறுத்தப் பட்டிருக்கிறது.
சிங்கள ராணுவ அதிகாரிகளுக்கு, இந்திய அரசாங்கம் ராணுவப்பயிற்சி அளிப்பதை எதிர்த்து தமிழர் விடுதலை கழகத்தினர் நடத்திய போராட்டத்தின் போது, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அண்டனி யின் உருவ பொம்மைக்கு தீ வைக்க முயன்றனர்.
அதை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், 20 தமிழர் விடுதலை கழகத்தினரை கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
தமிழ் அமைப்புகள் காட்டிய எதிர்ப்பின் காரணமாக, ஊட்டியில் சிங்கள ராணுவ அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட இருந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டு, மைசூருக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
இந்திய மண்ணில் சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் திரு. அர்ஜூன் சம்பத். இந்திய ஜனாதிபதிக்கு தந்தி அனுப்பும் படி மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இலங்கையில் சிங்கள இனவெறி ராணுவம் நிராயுதபாணியாக இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது திட்டமிட்டுக் கனரக ஆயுதங்களையும் குண்டுகளையும் வீசி, விமானத்தைக் கொண்டு தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தி பல ஆயிரக்கணக்கான மக்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்துள்ளது என்றும், அது கடுமையான போர்க் குற்றம் என்றும் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.
ஆனால், சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த ஹிலாரி கிளிண்டனிடம், இந்திய அரசாங்கம் இலங்கையில் நடந்த இனவெறிதாக்குதல் பற்றி பேசியதாக அரசு தரப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இலங்கைத் தமிழர்களின் அவல நிலை குறித்து ஹிலாரி கிளிண்டனிடம் எதுவும் பேசவில்லை. அமெரிக்கரான ஒபாமாவுக்கு, இலங்கைத் தமிழர்கள் மீது உள்ள மனிதாபிமான இரக்கம் கூட ஜெயலலிதாவிடம் காணக்கிடைக்காதது தமிழர்களாகிய நமது துர்பாக்கியம்.
சமீபத்தில், ராஜபக்சே வெளிப்படையாக கூறிய ஒரு முக்கியமான வார்த்தை ஒன்றை திரும்பவும் இப்போது நினைவு கூர்ந்தால், இந்திரா காங்கிரஸின் நிலைப்பாடு என்னவென்று தமிழக மக்களுக்குப் புரியும்.
“இலங்கையில் போர் நிறுத்தம் பற்றி எங்களிடம் இந்தியா எதுவும் கூறவில்லை!” என்பது தான். இதிலிருந்து இந்திரா காங்கிரஸின் கபட நாடகம் தெளிவாகிறது.
0 comments:
Post a Comment