கோயம்புத்தூர் ஜூலை 13: கோயம்புத்தூர் சாய்பாபா காலணியில் உள்ள ஒரு டாஸ்மாக் அருகில், பட்டாப்பகலில் பொதுமக்கள் எல்லாரின் முன்பு நடந்த கொலை சிசி கேமராவில் பதிவாகியுள்ள சம்பவம் நேற்று நடந்துள்ளது.
பெய்ண்டர் வேலை பார்த்துவரும் என்.சந்தோஷ் குமார் (வயது 29) தன் இரு நண்பர்களுடன், சாய்பாபா காலணியில் உள்ள டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு வரும் போது அவர்களுக்கிடையே தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. உடனே மற்ற இருவரும் வேறு இரு நண்பர்களை போன் மூலம் அழைக்கவே, மோட்டர்பைக்கில் வந்த அவர்களும் சேர்ந்து சந்தோஷ்குமாரை நடுரோட்டிலேயே அடித்து நொறுக்கி, அருகில் கிடந்த கல்லால் தலையில் அடித்து இருக்கிறார்கள். இந்தச் செயலை செய்த நால்வரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
ரத்னபுரியைச் சேர்ந்த எம்.கிருஷ்ணன்(28), மதுரையைச் சேர்ந்த ஆர்.முருகன்(21), கண்ணப்பபுரத்தைச் சேர்ந்த எம்.ராமச்சந்திரன்(26) மற்றும் பி.கணேசன்(31) ஆகிய இந்த நால்வர் மீது கொலை முயற்ச்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையம் செல்லும் ரோட்டில், பகல் 1.30 மணியளவில் போக்குவரத்து அதிகமாக இருந்த சமயத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அப்போது வாகணங்களில் வந்தவர்களும், ரோட்டில் போய்க்கொண்டிருந்தவர்களும் வெறுமனே நின்று வேடிக்கை தான் பார்த்திருக்கிறார்கள்.
போலிஸ் வந்த பிறகு தான் கோயம்புத்தூர் மருத்துவக்கல்லூரியில், சந்தோஷ்குமார் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். மிகக் கொடூரமான முறையில் தாக்கப் பட்டிருந்ததால், மருத்துவ சிகிட்சை பலன் இன்றி செவ்வாய் கிழமை காலையில் சந்தோஷ்குமார் இறந்து போனார். சாய்பாபா காவல்நிலையத்தில் சம்பந்தப்பட்ட நால்வர் மீதும் கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை நடந்த இடத்திற்க்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் மூலம், கொலைச் சம்பவம் பதிவு செய்யப்பட்டிருந்ததால் குற்றவாளிகளை காவல்துறையினர் மிக எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.
பதற வைக்கும் கொலைக்காட்சி.
0 comments:
Post a Comment