2ஜி அலைவரிசை விவகாரத்தில் மாட்டப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா விவகாரம், இப்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
இதுவரை அமைதியாக இருந்த அவரின், தற்போதைய வாக்குமூலங்கள் காங்கிரஸ் கட்சியினரை சிறிது கலக்கத்தில் மூழ்கடிக்க ஆரம்பித்துவிட்டது.
2ஜி அலைவரிசை ஏலம் விடுவதில் ராசா ஊழல் புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் மீது அவர் சிறையில் அடைக்கப்பட்டு, சிபிஐ-யின் விசாரணை பிடியில் இருந்துவருகிறார்.
இப்போது நிலைமை தலைகீழாக மாற ஆரம்பித்துள்ளது. அவர் மீது பிரச்சனையை ஆரம்பித்து வைத்த ஓவர் ஸ்மார்ட் சுப்பிரமணிய சுவாமி தலையை சொறியும் நிலை உண்டாகும் படி, நீதிமன்றத்தில் ராசா தகுந்த பதிலடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
ராசாவின் அளித்துள்ள விவரங்கள் படி,
ராசா ஊழல் செய்துவிட்டார் என்று புகார் கூறும்படி அவர் ஏதும் செய்திருக்கவில்லை. மாறாக பாஜக ஆட்சியில் தொலை தொடர்பு அமைச்சராக இருந்த அருண் ஷோரி எந்த விதிமுறையை பின் பற்றினாரோ அதே முறையில் தான் ராசாவும் 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டையும் செய்திருக்கிறார். எனவே ராசா தவறு செய்யவில்லை. (2ஜி அலைவரிசையை ஏலத்தில் இட வேண்டாமெனும் தீர்மாணத்தை கொண்டுவந்து அப்போது ஆட்சியில் இருந்த பாஜக கூட்டணி.)
எனவே இந்த முறை 1993-லிருந்தே நடைமுறையில் இருந்துவரும் முறைதான். இந்த முறையில் முன்னால் தொலைதொடர்புத்துறை அமைச்சர் செயல்பட்டது தவறு என்றால் அந்த முறையை நடைமுறைபடுத்திய பாஜக வினரும் சிறையில் அடைக்கப்படவேண்டியவர்கள் தான்.
டி.பி ரியாலிடி, யுனிடெக் நிறுவனங்களின் பங்குகள் நடைமுறையிலிருந்த சட்டத்திற்கேற்ப விற்கப்பட்டவை. யுனிடெக்-ன் பங்குகளை நார்வேயைச் சேர்ந்த டெலிநார் (தற்போதைய யுனிநார்) சட்டப்படியே வாங்கியிருக்கிறது.
பாகிஸ்தானின் ஐஸ்ஐ-ன் செல்வாக்கு கொண்டதாக சுப்ரமணியசாமியால் வர்ணிக்கப்பட்ட அரபு நாட்டு எடிசலாட் நிறுவனத்திற்கு, டி.பி ரியாலிடி-ன் பங்குகள், அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் ஒப்புதலின் பேரிலேயே விற்கப்பட்டன.
இது பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னிலையில் செய்யப்பட்ட ஒப்புதல்.(ஆனால் பழி எல்லாம் ராசாவின் மீது....!)
பாஜக ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்ட கொள்கைப்படி, உரிமங்களை ஏலத்தில் விடாமல், முதலில் வருபவர்களுக்கு முதல் உரிமை என்ற அடிப்படையில், முன்பு தொலைதொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த அருண் ஷோரி 26 உரிமங்களையும், அடுத்து தயாநிதி மாறன் 25 உரிமங்களையும் விற்றிருக்கின்றனர். அவர்கள் கடைபிடித்த அதே கொள்கையை பின்பற்றி ராசா 122 உரிமங்களை விற்றிருக்கிறார்.
தான் சட்டத்தை மீறி எந்த காரியத்தையும் செய்யவில்லை என்று ராசா கூறுவதில் சட்டப்படி நியாயம் இருப்பதாக இருந்தாலும், அதிக விலையுள்ள உரிமங்களை மிகக்குறைந்த விலைக்கு ராசா விற்றுவிட்டார் என்பது சிபிஐ-யின் வாதம்.
இந்த வில்லங்கமான வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங்கையும், சிதம்பரத்தையும், ராசா வசமாக மாட்டியுள்ளதால், போகிற போக்கில் ராசாவுக்கு சாதகமாக ஏதேனும் நல்ல மாற்றங்கள் வர உள்ளதா? அல்லது எதிர் கட்சிகளில் மன்மோகன் சிங்குக்கும் சிதம்பரத்திற்கும் ஆப்புகளை தயார் செய்யும் முயற்சியில் ஈடுபடுமா என பொருத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment