Tuesday, July 26, 2011

"Money talks and Yeddy (எடியூரப்பா) walks.."காங்கிரஸ் கிண்டல்.

நியுடெல்லி, ஜூன் 26-
மற்றவர்கள் மீது குறைகண்டுபிடித்து போராட்டம் நடத்தும் பாஜக, கர்நாடக முதன்மந்திரி பி.எஸ்.எடியூரப்பாவின் மீது எந்தவித கட்சி நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப்பார்த்து வருவதைப் பற்றி காங்கிரஸ் கூறும் போது,  “சட்டவிரோத சுரங்க ஊழலில் கிடைத்த வரும்படி, பாஜகா-வின் மேலிடம் வரை போய் இருக்கிறது” என விமரிசித்திருக்கிறது.

“ ஊழலின் ஊற்று எடியூரப்பா என்பது கூட முக்கியமில்லை, அவர் இன்னமும் எப்படி பதவியில் உட்கார்ந்திருக்கிறார் என்பது தான் கேள்வி. சட்டவிரோதமாக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மூலம் கிடைத்த வருமானம், பாஜகா-வின் மேலிடத்திற்க்கு பகிர்ந்தளிக்கப் பட்டிருப்பதாகபடுகிறது. எடியார் நடக்க- பணம் பேசுகிறது....!,” என்று காங்கிரஸ் பிரதிநிதி மனிஷ் திவரி கூறியுள்ளார்.

காங்கிரஸ் இப்படி கூறியிருப்பதன் காரணம், திங்கள் அன்று, முன்னால் தொலைதொடர்பு அமைச்சர் ராசா, மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரத்தின் ஒப்புதலோடு 2ஜி அலைவரிசை பரிவர்த்தணை நடைப்பெற்றதாக வெளியிட்ட அறிக்கையை காரணம் காட்டி, பிரதமரையும் சிதம்பரத்தையும் பதவி விலகும்படி எதிர்கட்சியினர் கூறியிருந்ததே ஆகும்.

0 comments:

Post a Comment

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons