மும்பை. ஜூலை 22:
மும்பையில் குண்டுவெடிப்பு தீவிரவாதிகளால் நடத்தப்பட்டபோது, அந்த தாக்குதலில் காயமுற்றோர், கை கால்களில் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு உயிருக்குப்போராடி, உதவி கோட்டு அலறிகொண்டிருந்த போது, அங்கிருந்த மும்பைவாசிகளில் பெரும்பலோர், உதவி கோட்டு அலறிக்கொண்டிருந்தவர்களுக்கு உதவ முன் வராமல் படம் எடுப்பதிலேயே குறியாக இருந்ததாக மும்பையிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளீதழில் செய்தி வந்திருந்தது.
அதற்கு முத்தாய்ப்பாக ஒரு இணையதளத்தில் மும்பை கோரமான சோக சம்பவத்தில் வேதனைப்பட்டுக்கொண்டிருப்பவர்களை படம் பிடித்து விற்பனைச் செய்யும் ஈனத்தனமான விளம்பரக்குறிப்பும் காணக்கிடைக்கிறது.
அன்னை தெரெஸா வாழ்ந்த பூமியில் இப்படியும் சில இந்தியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
11:23 AM
Jayenthra Pandi



0 comments:
Post a Comment