எலுமிச்சை ஊறுகாய்.
தேவை:-
20 எலுமிச்சம்பழங்கள்காய்ந்த மிளகாய் 20.
1 ஸ்பூன் வெந்தயம்.
2 ஸ்பூன் பெருஞ்சீரகம்.
உப்பு தேவையான அளவு.
செய்முறை:-
20 எலுமிச்சம்பழங்களை நன்றாக கழுவி, துண்டுகளாக வெட்டி, தேவையான அளவு உப்பு போட்டு ஒருநாள் முழுக்க ஊற வைக்க வேண்டும். மறுநாள் அவற்றை வெயிலில் காய வைக்க வேண்டும். பின்னர் மீண்டும் மூடி வைக்க வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் பகலில் வெயிலிலும், இரவில் மூடியும் வைக்க வேண்டும். காய்ந்த மிளகாய் 20, 1 ஸ்பூன் வெந்தயம், 2 ஸ்பூன் பெருஞ்சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து அவற்றை எலுமிச்சம்பழத்தோடு கலக்க வேண்டும். அதில் சிறிதளவு உப்பு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு 2 நாள் மூடி வைக்க வேண்டும். இடை இடையே உலோகமில்லாத கரண்டியால் கிளறி வந்தால் எலுமிச்சை ஊறுகாய் தயாராகிவிடும். நீண்டநாட்களுக்கு ஊறுகாய் கெடாமல் இருக்கவேண்டும்மானால், நல்லெண்ணையை நன்கு சூடாக்கி, பின்னர் ஆறவைத்து, ஊறுகாயை பாட்டிலில் போட்டு , அதன் மீது ஊறுகாய் நன்கு மூழ்கும்படி நிரப்பி வைத்தல் நீண்ட நாட்களுக்கு கெடாது.
மாங்காய் ஊறுகாய்
தேவை:-மாங்காய் 4
கடுகு 1 ஸ்பூன்
மிளகாய் தூள் 2 பிடி
பெருங்காயம் 1 ஸ்பூன்வெந்தயம் 1 ஸ்பூன்
எண்ணெய் 4 ஸ்பூன்
செய் முறை -
நான்கு மாங்காயை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு 1 ஸ்பூன் கடுகு தாளித்து, அதில் மாங்காய் துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும். அதில் 100 கிராம் மிளகாய்ப்பொடி, 2பிடி உப்பு, ஏற்கனவே வறுத்து பொடியாக்கிய 1 ஸ்பூன் பெருங்காயம், 1 ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை போட்டு பச்சை வாசனை போகும்வரை கிளறினால் மாங்காய் ஊறுகாய் தயார்.
அரை கிலோ பச்சை மிளகாய், 200 கிராம் இஞ்சியை துண்டாக்க வேண்டும். இரண்டையும் ஒன்றாக கலந்து 10 ஸ்பூன் உப்பு, 2 ஸ்பூன் மஞ்சள் பொடி போட்டு, 20 எலுமிச்சம்பழத்தின் சாற்றை ஊற்றி கலக்க வேண்டும். வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் பெருங்காயம், 8 ஸ்பூன் கடுகு ஆகியவற்றைப் போட்டு தாளித்து அதில் இஞ்சி, மிளகாய் கலவையை போட்டு லேசாக கிளறினால் தயாராகிவிடும்.