1992-ல் இந்தியாவை அதிர வைத்த சம்பவம் பாபர் மசூதி இடிப்பாகும். இதனை பின்னணியாகக் கொண்டு ஹிந்தியில் ஒரு படம் தயாராக இருக்கிறது. இப்படம் ஹிந்தியில் தயாராவது மட்டுமின்றி இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடும் திட்டமும் இருக்கிறதாம்.
இப்படத்தில் நடிக்க வைக்க முதலில் அமீர்கானிடம் அணுகி உள்ளனர். ஆனால் அமீர்கான் இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். இதே படத்தில் தற்போது அஜய் தேவ்கன் நடிக்க சம்மதித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய இப்படத்தை, மஹாராஷ்டிரத்திலுள்ள அரசியல் தலைவர்களில் ஒருவரான பால் தாக்கரேயின் மருமகள், ஸ்மிதா தாக்கரே தயாரிக்கிறார். இப்படத்தின் வேலைகள் விரைவில் துவங்கப்படும் என்று தெரிகிறது.
தனுஷின் தம்பி கதாநாயகனாக அறிமுகமாகிறார்
பிரபல நடிகரான தனுஷின் தம்பி கதாநாயகனாக அறிமுகமாகிறார். தா. முருகானந்தம் இயக்கும் ‘மல்லுக்கட்டு’ என்ற படத்தில் தனுஷின் தம்பி
வருண் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஹனிரோஸ் நடிக்கிறார்.இவர் தனுஷின் சித்தப்பா மகன். இவருக்கு ஜோடியாக ஹனிரோஸ் நடிக்கிறார். இவர்களுடன் மற்றும் பரத் ரெட்டி, செவ்வாழை, சாதிகா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவினை சி.பிரேம்குமார் செய்கிறார். வாலி, கபிலன், சினேகன், ஆண்டாள் பிரியதர்ஷினி ஆகியோர் பாடல்களை எழுத தாஜ்நூர் இசை அமைப்பில் இப்படம் உருவாகுகிறது .
“வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தங்களது திறமைகளை, அடையாளங்களை பதிய வைக்கவும் மற்றும் எண்ணங்களை, லட்சியங்களை செயல்படுத்தவும் கடுமையாகப் போராடுகின்றனர். போராட்டம் என்பதன் இன்னொரு அர்த்தம், மல்லுக்கட்டு. காதலுக்காக, அதனுடைய வெற்றிக்காகப் போராடும் இளைஞனின் கதையாக இப்படம் உருவாகிறது.” என்கிறார் இப்படத்தின் இயக்குனர்