மும்பை- ஜூலை 22-
மும்பை தொடர்வெடிகுண்டு நாசவேலை சம்பந்தமாக பிடிபட்டிருக்கும், பிரதான சந்தேகத்துக்குரிய நபரான ரியஸுல்-ஐப் பற்றி சில முக்கிய விபரங்கள், விசாரணையின் போது வெளிவந்திருக்கின்றன.
பீகார் மாநிலம் கிஷான்கன்ஞில் பிடிபட்ட, ரியாஸுல் என அழைக்கப்படும் இவனின் மற்றொரு பெயர் ஆகாஷ் கான். இந்தியாவில் 18 நகரங்களில் இவனுக்கு வங்கிக்கணக்கு உள்ளது.
இவனிடமிருந்து, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா- வங்கிகளின் ATM அட்டைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், அவன் கைப்பேசி மூலம் யாரொடெல்லாம் தொடர்பு கொண்டிருந்தான் என்பதையும் சோதித்துப் பார்த்தனர். அதில், நேபாளம், பாகிஸ்தான், பங்ளாதேஷ், கிஷான்கன்ஞ் மற்றும் பாட்னா முதலான இடங்களில் உள்ள நபர்களோடு அவன் தொடர்பு கொண்டது தெரியவந்துள்ளது.
விசாரணையின் போது அவனிடமிருந்து நான்கு கைப்பேசி மற்றும் கூடுதலாக இரு சிம்கார்ட்களையும் காவல்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள்.
ரியாஸுல்-ன் சொந்த ஊர் பாங்ளாதேஷில் டாக்காவில் உள்ள மலெகான் கிராமமாகும். ஆனால் அவன் சகோதரன் மற்றும் தாயார் மேற்கு வங்காளத்திலுள்ள தெற்க்கு தினஜ்புரில் இருக்கிறார்கள். ரியாஸுல் 2000-ல் பங்ளாதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் வந்துவிட்டதாக அவனை விசாரித்துவரும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, குஜராத், ஸ்ரீநகர், டெல்லி, கொல்கதா மற்றும் கர்நாடக மாநிலத்திலும் தங்கியிருந்திருக்கிறான். இரு மாதங்களுக்கு முன்னர் மேற்குவங்காளத்திலுள்ள சிலிகுரிக்கு போய்விட்டு தற்போது அவன் தங்கியிருந்த இடமான கிஷான்கன்ஞிலுள்ள பௌகாலி கிராமத்திற்க்கு வந்திருக்கிறான்.
கிஷான்கன்ஞில் முக்கியமான தகவல்களை சேகரித்த விசாரணை அதிகாரிகள் டெல்லி திரும்பியிருக்கிறார்கள். மும்பை நாசவேலையில் சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகளோடு ரியாஸுல் புகைப்படம் ஒத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment