Wednesday, July 20, 2011

கூடங்குளம் அணுமின் நிலையத்தில், பொய் பெயரில் வேலை பார்த்த வட இந்திய மீரான்கான் பிடிபட்டான்!





கூடங்குளம், ஜூலை 20-  நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நடந்துவரும் பலதரப்பட்ட வேலைகள், ஒப்பந்தக்காரர்கள் மூலம் செய்யப்பட்டு வருகின்றன. பெரும்பலோர் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

மும்பையில் நடந்த தொடர்வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்புபணிகள் பலப்படுத்தப் பட்டிருக்கின்றன. இதன் காரணமாக, இங்கு பணிபுரிவோர் அணைவரும் பரிசோதணைக்குப் பின் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

நேற்று முன் தினம், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நடத்திய பரிசோதணையில், சுபாஷ் பாஸ்வான் என்ற நபரின் ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்ட போது, அவன் உண்மையான பெயர் முகம்மது மீரான் கான் என்பதும், அவனது தந்தையின் பெயர் முகம்மது அலி ஆசாத் என்றும், அவன் உத்திரபிரதேசத்திலுள்ள ஹஜ்பூரை சேர்ந்தவன் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

முகம்மது மீரான் கான் என்ற வட இந்திய நபர், யாரும் அறியாதபடி, இத்தனை நாட்களும் போலிப்பெயரிலே வேலை செய்துவந்ததை அறிந்த கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கானை கூடங்குளம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

நெல்லை மாவட்ட காவல்துறை மேலதிகாரி விஜயேந்திர பிதரி, இது சம்பந்தமாக முகமது மீரான் கானை விசாரணை செய்துவருவதாக வந்துள்ள செய்தியைத் தவிர வேறு தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

முன்பும் ஒருமுறை, கூடங்குளம் அணுமின் நிலையம் இருக்கும் மலைப்பகுதியை சந்தேகத்துக்கு இடமான முறையில், சாக்குப்பையுடன் சுற்றிக்கொண்டிருந்த நபர் ஒருவன் பிடிபட்டான். விசாரணையின் போது அவன் வங்காளத்தைச் சேர்ந்தவன் என்றும், தமிழ்நாட்டுக்கு கள்ளத்தனமாக வேலைக்கு வந்தவன் வழிதெரியாமல் சுற்றிக்கொண்டிருப்பதாக, காவல்துறையினரின் விசாரணையின் போது தெரிவித்ததாக செய்தி வெளியாகி இருந்தது.

இந்த மாதிரி சந்தேகப்படும் படியான நபர்கள், தூரமான இடத்திலிருந்து இங்கேவந்து ரவுண்ட் அடிக்கும் போது, கூடங்குளத்தைச் சுற்றியிருக்கும் திருநெல்வேலிகாரர்களாகிய நமக்கு அல்லவா பகீரென அடிக்கிறது!!!

0 comments:

Post a Comment

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons