இவரை தெரிந்து கொள்ளுங்கள்.

 பாபா ராம் தேவ் - ரு பார்வை.
ஊழலுக்கு எதிராக போர்குரல் கொடுத்த, அன்னாஹஸாரே-வை தொடர்ந்து ஆக்ரோஷமாக குதித்து எழும்பியவர் தான் குருஜி பாபா ராம் தேவ்.
     போராட்ட மேடையில் அவர் அரசுக்கு வைத்த கோரிக்கைகளில் முக்கியமானவைகள்:-
     கள்ளத்தனமாக வருமானம் மூலம பணம் சேர்த்து, வெளிநாட்டு வங்கிகளில் போட்டு வைத்திருக்கும், இந்தியர்களின் பணத்தை மீட்டு, அதை இந்தியாவின் தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும். சம்பந்த் பட்டவர்களை தேசவிரோத சட்டத்தின் கீழ் விசாரணை செய்ய வேண்டும்.
      ஊழலில் ஈடுபடுபவர்களுக்கும், அதிலும் குறிப்பாக ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு, மரணததண்டணை வழங்கும் வகையில்
லோக்பால் மசோதா கடுமையாக இருக்க வேண்டும்.
       1000ரூபாய், 500ரூபாய் நோட்டுக்கள் ஒழிக்கப்படவேண்டும்.
    ஆட்சி, நிர்வாகம், வரிவிதிப்பு, கல்வி மற்றும் சட்டம் போன்றவற்றில் நடைமுறையில் உள்ள பிரிட்டீஷ் நடைமுறைகளை மாற்றி இந்திய நடைமுகைளப் பின்பற்ற வேண்டும்.

     வரி ஏய்ப்புக்குச் சாதகமாக உள்ள நாடுகளைச் சேர்ந்த வங்கிகளை இந்தியாவில் தடை செய்ய வேண்டும்.
      பல தரப்பட்டதொழில் புரியும் தொழிலாளர்களுக்கு, நாடெங்கும் ஒரே மாதிரியான கூலி நிர்ணயம் செய்யப் படவேண்டும்.
      இந்தியர்கள் அணைவரும் தங்களின் ஆண்டு வருமானத்தை வெளியிட உறுதி உறுதி செய்ய வேண்டும்.
      இந்தியர்களின் வருமான வரி விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறுவதற்க்கு வகை செய்யப்படப் படவேண்டும்.
     தொழிற்சாலைகள் நிறுவுவதற்காக விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கக் கூடாது என்பதால், நில ஆர்ஜித சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
      ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியா முழுவதும் இந்தியை அமலுக்கு கொண்டுவர வேண்டும்.
   -இவைகள் தான் பாபா ராம் தேவ்-ன் கோரிக்கைகள்.



   போரட்டத்தில் ஈடுபட்ட ராம் தேவை சமாதானம் செய்ய  காங்கிரஸ்காரர்களும், மத்திய அரசாங்கமும் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பாபா வழிக்கு வர மறுத்து விட்டார்.
   மாறாக, 2014-ல் வர இருக்கும் நாடாளுமன்ற் தேர்தலில், எல்லா தொகுதிகளிலும் தமது வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக, அரசுக்கு எச்சரிக்கையும் செய்துள்ளார்.
 
   இவ்வளவு யோக்யர் போல் பேசும் இந்த் பாபா, தனது இந்த் அரசியல் ஸ்டண்ட்-ஐ ஆரம்பித்த விதமே விசித்திரமானது.
    டெல்லியில்,  ஆன்மீக கூட்டம் போடுவதற்க்கு மைதானம் தேவைப் படுவதாக அரசிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, அரசாங்கத்திற்க்கு எதிராகவே கடையை விரித்து விட்டார்.
    பாபாவிற்க்கு முன், ஊழலுக்கு எதிராக போர் குரல் எழுப்பிய அன்னா ஹஸரே வின் கூட்டத்தில் சூழ இருந்த அதே நபர்கள் தான், இவரின் கூட்டத்திலும் இருந்ததாக செய்தி.
     அரசியல் கூட்டத்திற்கான அனுமதியை பெறாததால், தன் கடமையை செய்ய மேடைக்கு வந்த காவல்துறையினரிடம், “ரெண்டு நிமிஷம் டைம் கொடுங்கள், என பொருட்களை எடுத்துக் கொண்டு உங்களோடு வந்துவிடுகிறேன்” என்று டிமிக்கி கொடுத்துவிட்டு, உயரமான மேடையிலிருந்து கீழே குதித்து கூட்டத்தோடு கூட்டமாக ஒளிந்து கொள்ள முயற்ச்சி செய்திருக்கிறார்.
     போலிஸ் நாலாபக்கமும் ராம் தேவ்வை தேடிக்கொண்டிருக்கும் போது, பெண்களின் சுடிதார் கமிஸ் உடையில், துப்பட்டாவால் முக்காடு போட்டு, தாடியையும் சேர்த்து மறைத்தபடி, இரண்டு பக்கமும் இரு பெண்களை தாங்கலாக பிடித்தபடி, காலில் அடிபட்ட பெண் நடந்து வருவதுபோல் பாவலா புரிந்து தப்பிக்க முயலும் போது மாட்டிக்கொண்டார்.
      அதன் பிறகு, சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். ’வாழும் கலை’ புகழ் ரவிசங்கர் வந்து கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஜூஸ் குடித்துவிட்டு உண்ணவிரதத்தை முடித்துக் கொண்டார்.
   உண்ணாவிரதத்தால் உடல் நலம் குன்றியதால், இங்கிலீஸ் மருந்தெல்லாம் ஏமாற்றுவேலை, ஆயுர்வேதம் தான் உண்மையானது என்று எல்லாருக்கும் ஆயுர்வேத மருந்து கொடுத்துக் கொண்டிருந்தவர் இங்கிலீஸ் (அல்லோபதி) மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெறவேண்டிய நிலை உண்டாயிற்று.


   வித்தியாசமான முறையில் இந்திய அரசியலில் களம் இறங்க முயற்சி செய்திருக்கும் இந்த பாபா வின் முயற்சி ரொம்பவும் விசித்திரமாகவே இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

   நேஷனல் தூர்தர்ஷண் தொலைக்காட்சியில் யோகாசனமும், அவருடைய உதவியாளர் பச்சை மூலிகைகளை காட்டி மருத்துவமும் கூறிக்கொண்டிருந்ததை பார்த்து பழகிய மக்களுக்கு, பாபா அரசியலில் ஈடுபட முயற்சித்ததும், யார் இவர்? என்பதை அறியும் ஆவல் மேலோங்குவது நியாயமே.

யார் இந்த பாபா ராம் தேவ்?
இவர் உண்மையான பாபாவா?
இவரின் தகுதி கருதி இப்பட்டம் கொடுக்கப் பட்டதா?
   வெறும் ஆயுர்வேதமும் யோகாசனமும் கற்ற எத்தனையோ பேர், தங்களை, பாபா என்று கூறிக்கொள்வதில்லையே?
    தான் ஒரு மதகுரு இல்லை என்று இவறே வாய் திறந்தும் கூறியிருக்கிறார்.
    என்றால், ஒரு மருத்துவர் என்கிற தகுதியை தவிர வேறேதும் இல்லாமல் தன்னை ஒரு பாபா என்று அழைத்துக் கொள்வது சுத்தமான ஏமாற்றுவேலை அல்லவா?
சரி.. இவர் யார் என்பதை இப்போது பார்ப்போம்.
இவர் பிறந்தது ஹரியாணா மாநிலத்தில்.
பிறந்த வருடம் 1965.
லோக்கல் பள்ளிக்கூடத்தில் எட்டாம் கிளாஸ் வரை படித்துவிட்டு, அதன் பிறகு சமஸ்க்ருதமும், யோகாவும் கற்றுக்கொண்டு சிறிது சிறிதாக தொழிலை ஆரம்பித்தார்.

   முதன் முதலாக ஆஸ்தா தொலைகாட்சியில் தோன்றி யோகாசன நிகழ்ச்சிகளை வழங்கியதன் மூலம் பிரபலம் அடையத்தொடங்கினார்.

    தொலைகாட்சியில் பிரபலம் அடைந்த குறுகியகாலத்திற்க்குள் பதஞ்சலி யோகபீடம் என்ற பெயரில் ட்ரஸ்ட் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டார். அப்போதைய குடியரசுத் துணைத் தலைவராக இருந்த திரு.பைரோன் சிங் செகாவத், 2006ஆம் வருடம், ஹரித்வாரில் இந்தக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

   அதன் பிறகு, பதஞ்சலி ஆயூர்வேத கல்லூரி, பதஞ்சலி பள்ளிக்கூடம், மாடுகள் சரணாலயம்,  பதஞ்சலி ஃபுட் அண்ட் ஹெர்பால் பார்க் லிமிடெட், பதஞ்சலி மருத்துவ பூங்கா என வரிசையாக திறக்க ஆரம்பித்தார்.


   பற்றாக்குறைக்கு, தன் உடல் எடையை குறைக்க எத்தனையோ மருத்துவ முறைகளை முயன்று பார்த்து விரைக்தி அடைந்து கடைசியில் ராம் தேவ்வின் யோகாசன வகுப்பில் பங்கேற்ற சில மாதங்களுக்குள், அற்புதமான முறையில் எடை குறைந்த, சுனிதா என்ற பெண், இங்கிலாந்தில் கிளாஸ்கோ அருகில், அவருக்கு பாத்தியப் பட்ட ’நார்த் அயர்ஷைர்’ என்ற குட்டித் தீவையே, ராம் தேவ்க்கு பரிசாக கொடுத்துவிட்டார்.
   ஆள் அரவம் இல்லா ஏகாந்தமான இந்த தீவின் மதிப்பு ஏறக்குறைய நாற்பத்தைந்து கோடி ரூபாய்கள்.
   சாதாரண இந்தியன் கூட தன் வருமானவிபரத்தை வெளியில் தெரிவிக்கவேண்டும், வருமானவரியை கட்டவேண்டும் எனக்கூறும் இந்த மஹாபுருசர், இந்திய அரசுக்கு முன் நிபந்தணைகளை வைத்துப் போராடப்போகும் முன் தான் அல்லவா ஒரு நல் முன்மாதிரியாக, அதாவது ‘யோக்கியராக’ நடந்து காட்டியிருக்கவேண்டும்?
  இந்திய தொழிலாளிகள் அணைவருக்கும் சமகூலி கொடுப்பதைப் பற்றி வாதிடும் இந்த பாபாவின் கீழ் இருக்கும் அமைப்புகளில் சரியான சம்பளம் தரப்படாததால், அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன்.



   ராம்தேவுக்குச் சொந்தமான ஹரித்துவாரில் உள்ள திவ்ய யோக் மந்திர் டிரஸ்டின் 115 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போராட்டக் களத்தில் குதித்த பிருந்த கரத், ராம் தேவ் தயாரித்தளிக்கும் ஆயுர்வேத மருந்துகளில் என்னென்ன பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
   சில வருடங்களுக்கு முன்பாக, இவரைப் பற்றி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட செய்தி, ஆயூர்வேத மருந்து என இவர் விற்கும் சில மருந்துப் பொருட்களில், மனிதர்கள் மற்றும் மிருகங்களின் எலும்பிலிருந்து எடுக்கப் பட்ட பொருட்கள் கலப்பு செய்யப் பட்டிருந்த விசயம்!
   இதை பிருந்தா கரத் பத்திரிக்கையாளர்கள் முன் வெளியரங்கமாக விமரிசித்திருந்தார். ஆனால் விஸ்வஹிந்துபரிஷத்துடன் பாஜாகவும் சேர்ந்துகொண்டு, பிருந்தா கரத்துக்கு எதிராகவும் பாபாவுக்கு ஆதரவாகவும் பேசி விசயத்தை அமுக்கிவிட்டார்கள்.
  பசுவதைக்கு எதிராக பேசும் இந்த பாபா, தான் தயாரிக்கும் ஆயூர்வேத மருந்துக்களில் மிருகக்கழிவுகளை சேர்ப்பது முறையா? அதேப் போல் பசுவதையை எதிர்க்கும் இந்திய மதவாத கட்சிகளும் இவர் செய்வதை கண்டு கொள்ளாமல், கூடவே சப்பைக் கட்டும் யுக்திக்குக் காரணம் ஏன்?
  வருடா வருடம் தூங்குவது, தேர்தல் வருவதற்கு முன் மட்டும், ஓட்டு வசூல் செய்வதற்காக், ‘ராம் மந்திர்’ விசயத்தை பெரிதுபடுத்துவது, இப்படி உபயோகித்த டெக்னிக்குகள் எல்லாம் பழையதாகவும், எடுபடாமலும் போனதால்  பாஜாக மற்றும் விஸ்வஹிந்துபரிஷத் உள்ளிட்ட கட்சிகள், அடுத்த துருப்பு சீட்டாக பாபா ராம் தேவ்வை உபயோகிக்க முயற்சிக்கின்றன என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு.
  நல்ல விசயங்களுக்கு முன் வந்துப் போராடும், மஹாராஸ்ட்ராவை சார்ந்த் மேதாபாட்கர் போன்ற சமூகப் போராளிகள் கூட ராம் தேவ் விசயத்தில் சுத்தமாக ஒதுங்கிக் கொண்டதன் காரணம், கோடீஸ்வரரான பாபா ராம் தேவ் நடத்தும் போராட்டம், மக்கள் நலன் கருதி நடத்தப் படும் போராட்டம் அல்ல. மாறாக இது ஒரு அரசியல் நாடகம்! இவரை பின்ணணியிலிருந்து இயக்குவது ஆர் எஸ் எஸ் தான், என்ற உண்மை வெளிப்பட்டதே காரணம்.





          உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அவுரங்காபாத் கிராமத்தில் பதஞ்சலி என்ற யோஹபீடம் நிறுவுவதற்கு உள்ள நான்கு ஹேக்டர் அரசுக்கு சொந்தமான விவசாய நிலத்தை பாபா ராம் தேவ் கள்ளத்தனமாக பதிவு செய்து கையகப்படுத்தியது தொடர்பாக ஒரு வழக்கும் இவர் மீது உண்டு. இவ்வழக்கில், மாவட்ட நீதிபதியால் நேரடியாகவே கள ஆய்வுசெய்யப்பட்டு விவசாய நிலத்தைப் பாபா ராம்தேவ் களவாடியது நிரூபிக்கப்பட்ட உடன், இப்போது அந்த நிலத்திற்கு ஈடாக விவசாயிகளுக்கு வேறு நிலம் வழங்குவதாக பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்.

      இப்படிப்பட்டவர்களெல்லாம் இந்திய அரசியலுக்கு வந்தால் நம் நாடு உருப்படுமா? என்கிற கேள்வி எழுந்தாலும், இப்படி பட்டவர்கள் தானே அரசியலுக்கு வரத்துடிக்கிறார்கள், அந்த துடிப்பில் வந்தும் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை!

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons