மாஸ்கோ, ஜுலை 2. இந்த வருட இறுதிக்குள், உலகின் அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியாவுக்கு ரஷ்யா வழங்க இருக்கிறது. இது பத்து வருட குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் இருக்கும்.இத்தகவலை ரஷ்ய கடற்படைத் தளபதி விளாடிமிர் வைசோட்ஸ்கி கூறியுள்ளார். "நெர்பா" என்னும் அந்த நீர்மூழ்கிக் கப்பல் இந்தியாவுக்கு இவ்வருட இறுதிக்குள் ஒப்படைக்கப்ப இருக்கிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய கடற்படைத் தளபதி, " இந்த நீர் முழ்கி கப்பலை இயக்குவதற்கு ஏற்கெனவே இந்திய கடற்படை வீரர்கள் குழு ஒன்றுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது." என்றார்.
"நெர்பா" நீர்மூழ்கிக் கப்பலில் ஒரே நேரத்தில் 73 வீரர்கள் பயணம் செய்ய முடியும். அதிநவீன ஏவுகணைகளை கொண்ட "நெர்பா" தொடர்ந்து 100 நாட்களுக்கு தண்ணீருக்குள்ளேயே தங்கியிருக்கும் திறன் கொண்டது.
இதனிடையே, "அட்மிரல் கோர்ஸ்கோவ்" என்னும் விமானம் தாங்கி கப்பல் உள்ளிட்ட தளவாடங்களை வழங்குவதில் ரஷ்யா தொடர்ந்து தாமதம் செய்து வருவதால் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது. இந்த போர் கப்பலுக்கான குத்தகை தொகை 650 அமெரிக்க டாலரிலிருந்து 900 அமெரிக்க டாலர் வரை இருக்கக்கூடும்.
2008ஆம் வருட மத்தியில் இந்திய கப்பற்படையிடம் ஐ என் ஸ் சக்ரா அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது போல, இந்த நீர்மூழ்கி கப்பலும் ஒப்படைக்கப்பட இருக்கிறது.
ஆனால், 2008 ஆம் வருடம் நவம்பர் மாதம் எட்டாம் தேதி ஐ என் எஸ் சக்ரா வெள்ளோட்டத்தை ஆரம்பித்தபோது, பிரியோன் வாய்வு கசிவினால், உறங்க்கிகொண்டிருந்த இருபது கப்பற்படையினரும் தொழில்நுட்ப வேலையாட்களும் சம்பவத்திலேயே இறந்துபோயினர்.
இது சம்பந்தமாக எழுந்த விசாரணையில், கப்பலில் இருந்தவர் ஆர்வக்கோளாறினால், கப்பலில் தீ பிடித்தால் அணைப்பதற்கான பொத்தானை, தெரியாத்தனமாக அழுத்தியதால் வந்த விபரீதம் என கண்டறியப்பட்டது.
தரக்குறைவான பிரீயோன் வாயுவை உபயோகப்படுத்தியதர்க்காக அந்த கப்பலின் கேப்டனும் குற்றம் சாட்டப்பட்டார்.
0 comments:
Post a Comment