Monday, July 4, 2011

அப்பாவையும் சகோதரனையும் காப்பாற்ற, தன் உயிரை தியாகம் செய்த 12 வயது சிறுமி...!






கல்யாணி(மேற்க்கு வங்காளம்): சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப் பட்டிருந்த சகோதரன், இரு கண்களையும் மாற்றியே தீரவேண்டிய நிர்பந்த வாழ்க்கையோடு கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்த அப்பா, இவர்கள் படும் அவஸ்தையைப் பார்த்து பார்த்து தின்மும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த சிறுமி, ‘தான் மரித்தப் பின் தனது உடல் உறுப்புகளை அவளது அப்பா மற்றும் அண்ணனுக்கு வழங்கும் படி’ குறிப்பு எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து, உயிரை தியாகம் செய்திருக்கும் சம்பவம் மேற்க்கு வங்காளம், நாடியா மாவட்டத்திலுள்ள ஜோபரா எனும் கிராமத்தில் நடந்து, கேட்போர் கண்களில் கண்களில் கண்ணீரையும், உடலில் சிலிர்ப்பையும் உண்டாக்கும்படி நடந்துள்ளது.

குடும்பத்தை காப்பாற்றுவதற்க்காக, பாதிக்கப்பட்ட இரு கண்களோடு, தினக்கூலி வேலைக்கு, சிரமப்பட்டுச் சென்றுவரும் தன் தந்தை மிரிதுல் சர்க்காரின் பரிதாப நிலையையும், பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தோடு வேதனை வாழ்க்கை வாழ்ந்து வரும் தன் சகோதரன் மனோஜித்தின் கஷ்டங்களையும் பார்த்து தினமும் மனவருத்தப்பட்டிருக்கிறாள் 12 வயதான மம்பி சர்க்கார் என்ற சிறுமி. இந்தக் கவலை, அவளை இப்படிப்பட்ட அழுத்தமான முடிவை எடுக்க வைத்திருக்கிறது.




மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்த போது, மனோஜித்தின் இரண்டாவது சிறுநீரகமும் பழுதடைய ஆரம்பித்துவிட்டதாக ம்ருத்துவர் கூறியதாக காவல்துறையினர் கூறினர்.

 கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி இந்தச் சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. ஆறாம் வகுப்பு படித்த அந்த சிறுமி, இறப்பதற்க்கு முன் எழுதிவைத்திருந்த கடிதம் அவள் இறந்த ம்றுநாள் தான் கைக்கு கிடைத்திருக்கிறது.

உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் தபஸ் தரப்தார், இது பற்றிக் கூறுகையில், மம்பி(இறந்துபோன சிறுமி) தன் சகோதரி மனிக்காவுடன் தற்கொலை செய்துகொள்ளப் போவது குறித்து கலந்துரையாடியதாகவும்,  மனிக்கா அதை நிராகரித்துவிட்டு பள்ளிக்கூடத்துக்கு போய் விட்டதாகக் கூறப்பட்டதை, காவல்துறையினர் தெரிவித்து இருக்கிறார்கள்.

மம்பி போன்றோர்கள் தான் பூமியில் தெய்வங்களாக மாறுகிறார்கள், எனத் தோன்றுகிறது.
முடியுமானால் தயவு செய்து மம்பிக்காக சில வினாடிகள் மனதார அஞ்சலி செய்யுங்கள்.




0 comments:

Post a Comment

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons