கனிமொழிக்கு ஆதரவாக 2 G வழக்கில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி நீதிபதியின் முன் எடுத்து வைத்துள்ள விவாதங்கள் பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கின்றன.
குறிப்பாக அவர் “ராசா தான் தொலை தொடர்பு துறை மந்திரி . கனிமொழி அந்த துறையின் அமைச்சர் இல்லை. ஆ.ராசா தான் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி செயலாற்றியிருக்கிறார். அதில் ஏதும் தவறு இருந்தால் அந்த தவறுக்கு பதிலளிக்க வேண்டியது ராசாதான்.
இப்படி அதிரடியாக ராசாவை மொத்தமாக கை கழுவி விடுகிறது திமுக வைத்திருக்கும் வக்கீல் தரப்பு. மேலும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்…
கோர்ட்டில் இந்த வழக்கு நடக்கும்போது திமுகவைச் சார்ந்த பல எம்பிக்கள் முக்கிய பிரமுகர்கள் அங்கே இருந்தாலும் எல்லாரும் கனிமொழியைத் தான் கண் போல கவனித்துக் கொண்டார்களே தவிர யாரும் ஒரு பேச்சுக்குக்கூட தங்கள் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை நெருங்கக்கூட இல்லை.
சி.பி.ஐ தரப்பு ஜெத்மலானிக்கு எதிரான தங்கள் வாதத்தில் தங்கள் வக்கீல் லலித் மூலம் ஆணித்தரமாக “அலைக்கற்றை வழக்கின் அடி மூளை கனிமொழிதான் என்று சொல்லியிருக்கிறது. ராசா எடுத்த அனைத்து முடிவுகளையும் பின்னால் இருந்து இயக்கியது கனிமொழிதான் என்கிறது சி.பி.ஐ.
காரசாரமாக இந்த வழக்குப் போய் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், ராசாவுக்கு எதிராக திமுக வின் போக்கும், முக்கிய குற்றவாளியாகப் பேசப்பட்ட ராசாவை விட்டுவிட்டு கனிமொழியை முக்கிய குற்றவாளியாக சிபிஐ பிடித்துக் கொண்டிருப்பதிலிருந்து, ராசாவிடமிருந்து மிக முக்கியமான விசயங்களை சிபிஐ கரந்துவிட்டது போல் தான் படுகிறது.
இப்படியான பரபரப்பு சூழ்நிலையில் அப்ரூவர் ஆக ராசா மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய இருப்பதாகவே இந்த வழக்கை கூர்ந்து கவனிக்கும் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்… அதே போல் கனிமொழி நிச்சயம் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்கிறார்கள்.
கனிமொழியின் அபாண்ட பழியினால் தான் ராசா அப்ரூவர் ஆகிறாரா இல்லை ராசா அப்ரூவர் ஆகப் போவதால்தான் கனிமொழி அபாண்ட பழி சுமத்துகிறாரா? எப்படியோ … அலைக்கற்றை வழக்கில் இன்னும் எதிர்பாரா அலைகள் நிறையவே வரும் என்பது உண்மை.!
0 comments:
Post a Comment