சென்னை ஜூலை 13:
நேற்று இரவு தமிழக அரசினால், பிறப்பிக்கப்பட்ட வாட் வரி மற்றும் கட்டண உயர்வு உத்தரவுகள் நள்ளிரவிலேயே அமலுக்கு வந்தன.
இதுவரை 4 சதவீதமாக வசூலிக்கப்பட்டு வந்த மதிப்புக் கூட்டு வரி மற்றும், வாட் வரி 5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. விவசாய கருவிகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவை மீது இப்போது விதிக்கப்படும் 4 சதவீத வரி முழுமையாக விலக்கப்படுகிறது.
’மக்கள் மீது பாரத்தை ஏற்றக்கூடாது என்பதற்க்காக, திமுக அரசு வாட் வரியை திணிக்காமல் இருந்தது’ கருணாநிதி விளக்கம்.
இந்த அதிரடி நடவடிக்கையால் மொபைல் போன், டீவி, சிகரட், ஜவுளி, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விலை அதிகரிக்கும். டாஸ்மாக் கடைகள் மூலம் விற்கப்படும் மது வகைகளின் விலையை உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 12 மணி நேரத்துக்குள் வரிகள் உயர்த்தப்பட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அசையா சொத்துக்கள் மீதான பத்திரப்பதிவு, ஒப்பந்தங்கள், குத்தகை பத்திரப்பதிவு போன்றவையும் வரிகளும் உயர்த்தப்படுகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.300 கோடி வருமானம் கிடைக்கும்.
டி எல்சிடி திரை, எல்சிடி திரை (கொண்ட டீவி, கம்ப்யூட்டர் மானிட்டர்கள்) டிவிடி, சிடி, செல்போன், ஐ போன், ஐ பாட், அவற்றின் உதிரி பாகங்கள், உபரி சாதனங்கள் ஆகியவற்றின் மீது தற்போது 4 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. இனிமேல் அந்த பொருட்கள் மீது 14.5 சதவீதம் வரி விதிக்கப்படும். அதாவது 3 மடங்குக்கு அதிகமான வரி விதிக்கப்பட்டுள்ளது.
’அடுத்த மாதம் 4ஆம் தேதி சட்டசபை கூடும் முன்பே, மக்கள் மீது திணிக்கப்பட்ட வரி மக்களுக்கு எதிரானது’ என்றும்,ஜெயலலிதா ’அரசுக்கு வந்த இரண்டே மாதத்திற்குள் 3900 கோடி வரி விதிப்பு, மக்களே வாங்கிக் கொண்ட விதி..!’ கருணாநிதி விமர்சனம் செய்திருக்கிறார்.
தமிழ்நாடு வணிகர் சங்கம் இதற்க்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment