திருவனந்தபுரம். ஜூலை 30-
ஒரு லட்சம் கோடிக்கு ரூபாய்க்கு அதிகமான பொக்கிஷங்களை கொண்டிருக்கும் கேரள பத்மநாபஸ்வாமி கோயிலின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள நான்கு மெட்டல் டிடெக்டர் கருவிகள் பழுதுபட்டிருப்பதை, கேரள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை, பத்மநாபஸ்வாமி கோயிலின் பாதுகாப்பு நடவடிக்கைகளை சோதனை செய்வதற்காக கூடுதல் டி.ஜி.பி வேணுகோபால் நாயர் சென்ற போது, மெட்டல்டிடெக்டர்கள் வேலை செய்யாது இடையிடையே நின்றுபோவதை கண்டு தெரிவித்திருக்கிறார்.
கோவிலின் நான்கு பிரதான நுழைவு வாயில்களில் வைக்கப்பட்டுள்ள நான்கு மெட்டல் டிடெக்டர்களில் 2 வேலை செய்யவில்லை. மற்ற இரண்டிலும் சிறு சிகப்பு விளக்குகள் எப்போதும் எரிந்தவண்ணம் இருக்கிறது. இதை சமீபத்தில் ஆசியா நெட் சேனல் வெளிப்படுத்தியிருந்தது.
இந்த கோவிலை கவனித்துக்கொள்வதற்கு சிறப்பு கமிட்டி ஒன்று, திருவாங்கூர் அரச குடும்பத்தின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.
அதிகாரிகளிடம் விசாரித்த போது மூன்று கருவிகள் வேலைசெய்து கொண்டிருந்ததாகவும். நாலாவது கருவி மட்டும் சில சமயங்களில் வேலை செய்யாமலிருப்பதாக காவல்துறையினர் கூறியதாக தெரிவித்த டி.ஜி.பி, தொலைக்காட்சியில் வெளியான செய்தியின் அடிப்படையில் தான் சோதணை செய்வதற்கு வந்ததாகவும் குறைகள் இருப்பின் அவை உடனே சரி செய்யப்படும் என நேற்று வெள்ளிக்கிழமை, நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவுபடி, 150 வருட பழைமை வாய்ந்த இரு பெட்டகங்கள் அடுத்த மாதம் திறக்கப்பட இருக்கிறது. அதையொட்டி கோவிலை சுற்றிலும் சுவர்களில், மிகவும் பாதுகாப்புமிக்க கண்காணிப்புக்கருவிகள் பொருத்தப்பட இருப்பதாகவும், 200க்கு மேற்பட்ட காவல்துறையினர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட இருப்பதாகவும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment