ரெட்மோண்ட் (ஆரிகன்) ஜூலை 7: ஆக கடைசியில், 99வயதில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்து பட்டமும் வாங்கியிருக்கிறார், லியோ ப்ளாஸ் என்ற பெரியவர்.
அமெரிக்காவில் ஆரிகனில் வசித்துவரும் இவர் 1932-ல் பட்டப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டவர்.
இப்போது ‘கிழக்கு ஆரிகன் பல்கலைக்கழகம்’ என அழைக்கப்படும் இந்தப் பல்கலைக்கழகம், 1932-ல் ‘கிழக்கு ஆரிகன் பள்ளி’ என்ற பெயரில் இயங்கி வந்த சமயத்தில், லியோ ப்ளாஸ் ஆசிரியர்க்கான படிப்பை பயின்று வந்திருக்கிறார். அந்த சமயத்தில் அவரது நண்பர் 150டாலர் வேலைக்கு அழைத்திருக்கிறார்.
”அந்த சமயத்தில் 150 டாலர் என்பது மிகப்பெரிய பணம்!” என இப்போது கூட நினைவுகூறும் லியோ, பட்டப்படிப்பை முடிக்க மிகக்குறிகிய காலமே இருந்த போதும், படிப்பை விட்டுவிட்டு வேலைக்கு போய் விட்டாராம். கடைசி நேரத்தில் வாங்க வேண்டிய பட்டத்தை வாங்காமல் விட்டது அவருக்கு ஒரு கவலையாக இருந்து வந்ததாம். ஆனால் இந்த 99 வயதில் மனநிறைவுடன் இருக்கிறார், பட்டம் கையில் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில்.
லியோ ப்ளாஸ், வரும் ஆகஸ்ட் மாதம் தனது 100வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.
பட்டப்படிப்பில், ’புதிய பட்டத்தைப் பெற்றிருக்கும் அதிக வயதானவர்’ என்கிற உலகசாதணையை இவர் ஏற்படுத்தியுள்ளார்.
இந்த பட்டத்தால் அவருக்கு லாபம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் இந்த வயதில் கூட மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்து விட்டார்.
0 comments:
Post a Comment