சென்னை. ஜூலை 29-
மத்திய அரசு கொண்டுவர இருக்கும் மதக்கலவர தடுப்புச்சட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேவையற்ற ஒன்று என எதிராக விமர்சனம் செய்திருக்கிறார்.
‘’மதக்கலவர தடுப்புச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்களிடையே, மத அடிப்படையில் வேறுபாடு உண்டாகும்’’ என்று கவலைப்பட்ட(?) ஜெயலலிதா மேற்கொண்டு “மதக்கலவரத்தை மாநில அரசுகள் தடுக்க தவறிவிட்டால், மாநில அரசுகள் மீதும் எதிர்கட்சிகள் மீதும், மத்திய அரசு நேரிடையாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. இது மத்திய அரசு மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமைகளின் மீது குறுக்கிடுவதாக அமைந்துவிடும். எனவே மத்திய அரசு கொண்டுவர இருக்கும் இந்த சட்டத்தை அரசியல் கட்சிகள், பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள் அணைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும்” என கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அரசியல் லாபத்தை தேடிக்கொள்வதற்காக மக்களிடையே பகைமையை உண்டாக்கி உயிர்களை பலி கொள்ளும் மதக்கலவரங்கள் கடுமையாக வேரறுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை, உலக ஞானத்தின் அடிமட்டத்திலிருக்கும் சாமானியன் கூட சொல்லுவான். ஆனால் மக்களின் நலனில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய, சிந்திக்க வேண்டிய தமிழக முதல்வரின் இந்த விமர்சனம் மிகவும் குழப்பமானதாகப் படுகிறது.
0 comments:
Post a Comment