Thursday, July 7, 2011

கிறிஸ்தவரான நயன்தாரா திருமணத்துக்குப் பின் மதம் மாறுவாரா?

குரூப் டான்ஸராக இருந்த ரமலத்தை காதலித்தார் பிரபு தேவா. 1995-ல் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ரமலத்தை பிரபு தேவா திருமணம் செய்து கொண்ட போது, பிரபுதேவா-விற்க்காக இந்து மதத்திற்க்கு மாறி ரமலத் என்றிருந்த தன் பெயரை லதா என்று மாற்றிக்கொண்டார்.

இவர்கள் திருமண நடந்து 15 வருடங்கள் ஆகியிருக்கின்றன. இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. 2008ல் இவர்களின் இளைய மகன் புற்றுநோயால் மரணம் அடைந்துவிட்டான். 2009 ஆம் வருடம் வில்லு திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் போது, நயன்தாரா வுக்கும் பிரபுதேவா விற்க்கும் காதல் ஏறப்பட்டது.



விவகாரம் மிகப்பெரியதான நிலையில், கோர்ட் வரை சென்று, பிரபுதேவா-ரம்லத் இருவரும் பரஸ்பரம் பிரிந்து செல்வதற்க்கான மனுவை சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

விவாகரத்து முறைப்படி, இருவருக்கும் 6 மாதகால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.  இந்த அவகாச காலத்தில், தனது இரண்டாம் திருமணத்திற்கான ஏற்பாடுகளை சரியாக செய்துகொண்டு, தீர்ப்புக்காக காத்திருந்தார் பிரபுதேவா.





நேற்று ஜூலை7ஆம் தேதி இருவருக்கும் விவாகரத்துக் கிடைத்தது. அதன் பிரகாரம், 1995ஆம் வருடம் ஆகஸ்ட்மாதம் 9ஆம் தேதி இவர்கள் செய்து கொண்ட திருமணம் செல்லாததாக கோர்ட் அறிவித்தது.

அடுத்து எல்லாரும் ஆவலுடன் காத்திருக்கும் செய்தி என்னவென்றால், பிரபுதேவா வுடன் திருமணம் செய்துகொண்ட பின், ரம்லத் இந்துவாக மாறினார். இப்போது. கிறிஸ்தவரான நயன் தாரா இந்துவாக மாறுவாரா? என்பது தான்.

புகழ் பெற்ற நடிகையான நயன்தாரா, ஒருமுறை திருமணமாகியருக்கு இரண்டாம் மனைவியாகுவதற்க்காக, தன் கிறிஸ்தவ மதத்தை விட்டு விடுவாரா?  அதிலும் தேவாலயத்துக்கு தவறாமல் வழிபடச் செல்லும் இவரது நிலைப்பாடு எவ்வாறு இருக்கக்கூடும் என்பது எல்லாரின் வியப்புக்குறிய ஆவலாக இருக்கிறது!


மற்றொரு செய்தி, நயன்தாரா இந்துமதத்திற்க்கு மாறிவிட வேண்டும் என்பது பிரபு தேவா குடும்பத்தின் எதிர்பார்ப்பாக உள்ளதாம், திருமணமும் இந்து முறைப்படித்தான் நடக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்களாம்.

0 comments:

Post a Comment

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons