உலகத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கடந்த 1980 ஆம் ஆண்டில் இருந்ததை விட இப்போது இரட்டிப்பாகியுள்ளது.
இந்த தகவலை லான்செட் மருத்துவ மாத இதழ் வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்போடு இணைந்து பணியாற்றிய சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவானது, நீரிழிவு நோயானது உலகத்தின் அனைத்து பகுதிகளில் ஒன்று அதிகரித்துள்ளது அல்லது இருந்த அளவிலேயே தான் இருக்கிறது, குறையவில்லை என தெரிவித்துள்ளனர்.
கடந்த 1980 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 15.3 கோடியில் இருந்து 34.7 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்த அதிகரிப்பில் 70 சதவீதம், ஜனத்தொகை அதிகரிப்பு மற்றும் வயோதிகத்தினால் ஏற்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள 30 சதவீதம் உடல் பருமன் போன்றவற்றால் ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.
முன்பு உலகம் முழுவதும் சுமார் 28.5 கோடி பேர் தான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று எண்ணப்பட்டிருந்தது, ஆனால் தற்போது 34.7 கோடி பேர் பாதிப்பட்டுள்ளார்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
நீரிழிவு நோயில் மிக பரவலாக காணப்படுவது டைப்-2 எனப்படும் இரண்டாவது வகையே ஆகும். இந்த டைப்-2 ஏற்படுவதற்கு உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே காரணமாக கூறப்படுகிறது.
இந்த வகை பாதிப்பை கொண்டவர்கள், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் இருக்கின்றனர், இதனால் இருதய பாதிப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரகம் மற்றும் கண்கள் போன்றவற்றுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.
சீனா மற்றும் இந்தியாவில் மட்டும் சுமார் 13.8 கோடி பேர் நீரிழிவு நோயோடு இருக்கின்றனர். அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் 3.6 கோடி பேர் இருக்கின்றனர்.
நீரிழிவை கட்டுப்படுத்த தேவையான மருந்தின் விற்பனையானது கடந்த ஆண்டு 35 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 2015 ஆம் ஆண்டு வாக்கில் 48 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment