பாபா ராம்தேவ் ஒரு போலி பாபா என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
பாபா ராம் தேவ் நடத்தும் ஆசிரமத்திற்கு ரூ.1,100 கோடி சொத்திருப்பதாக கணக்கு காட்டுகிறார்கள். இதை எங்கிருந்து எடுத்தார்கள். எப்படி இவர்களுக்கு இது வந்தது. இதிலிருந்தே பாபா ராம்தேவ் ஒரு போலி பாபா என தெரிகிறது என் காங்கிரஸ் பொது செயலர் பி.கே.ஹரிபிரஷாத் தெரிவித்துள்ளார்.
கறுப்பு பணத்தை பற்றி பேசுவதற்கு முன் தான் முறையற்ற விதத்தில் சேர்த்த ரூ.1,100 கோடி ரூபாய்க்கு அவர் கணக்கு காட்டட்டும். இந்த பணத்தை மக்களுக்கு கொடுக்கட்டும் ஹரிபிரசாத் தெரிவித்தார் மேலும் தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிராக கடந்த 8 தினங்களாக உண்னாவிரதமிருந்தது வந்த பாபா ராம்தேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் கோரிக்கையின் படி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.
மேலும் லோக்பால் மசோதா திட்ட வரைபுக்குழுவில் இடம்பெற்றிருக்கும் மக்கள் பிரதிநிதிகளும் தமது சொத்துக்களுக்கு கணக்கு காட்டவேண்டும் எனவும் தெரிவித்துள்ள ஹரி பிரசாத், ஏன் கர்நாடக முதல்வர், எடியூரப்பாவுக்கு எதிராக இந்த ஊழல் குற்றச்சாட்டு எதையும் பாபா ராம்தேவ் முன்வைக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
0 comments:
Post a Comment