மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி என்ற அ இஅதிமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தமிழக அரசு தயாராகிக்கொண்டிருக்கிறது.
மொத்தம் 9.12 லட்சம் கணினிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுகின்றன.
கடந்த வாரம் உலக அளவில் ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பு வெளியானது. இந்த வாரத்தில் வாங்கும் விலை குறித்து முடிவெடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
முதற்கட்டமாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இக் கணினிகள் வழங்கப்படவிருக்கிறது. பின்னர் அரசு பொறியியல் ம்ற்றும் கலைக் கல்லூரி, தவிரவும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் அவை வழங்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 68 லட்சம் கணினிகள் வழங்கப்படும்.
இதற்காக 10.200 கோடி ரூபாய் செல்வாகும் எனக் கூறப்படுகிறது.
கணினிகளை வாங்கும் பணி அரசு நிறுவனமான எல்காட்டிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விண்டோஸ் மற்றும் இலவச மென்பொருள் பொருத்தப்பட்டு கணினிகள் வழங்கப்படும்.
ஆனால் இரண்டையும் இணைப்பது சில சிக்கல்களை உருவாக்கும், விண்டோஸ் அறிமுகச் சலுகையாக ஓராண்டிற்கு மென்பொருளை இலவசமாகத் தருவதாகக் கூறினாலும், தொடர்ந்து அதனைப் பயன்படுத்த மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், அது தேவையில்லாத் சுமை, இலவச மென்பொருளையே பயன்படுத்தவேண்டும் என்று வல்லுநர்கள் பலர் கருதுகின்றனர்.
0 comments:
Post a Comment